கண்டதேவி தேர் -துணை ராணுவத்தின் உதவியோடு தேரை ஓட வைக்கவா? ஐகோர்ட் கேள்வி
துணை ராணுவத்தின் உதவியோடு தேரை ஓட வைக்கவா? ஐகோர்ட் கேள்வி நவ 03, 2023 05:18 PM
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/kanda-devi-kovil-make-the-chariot-run-with-the-help-of-the-paramilitary-high-court-madurai-question/3473287
மதுரை: ‛‛ கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை மாநில அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, ‛‛ கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை மாநில அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?
பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் பல பிரிவினர் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் வருத்தத்திற்குரியது. நவ., 17 ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Comments
Post a Comment