Posts

Showing posts from November, 2024

கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் நிலங்கள் மீட்பு?

Image
  கரூரில் நீதிமன்றம் மூலம் கோயில் இடத்தை மீட்ட இந்து அறநிலை துறை - தீர்வை நோக்கி காத்திருக்கும் மக்கள் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் நிலங்கள் காதப்பாறை, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி பகுதியில் தனியார் வசம் உள்ளது. https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-news-recovery-of-land-belonging-to-karur-vennaimalai-balasubramanya-swamy-temple-tnn-204221 By :  பிரபாகரன் வீரமலை  | Updated at : 17 Oct 2024   கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் இடத்தை மீட்டு போடு வைத்தனர் Source :  Getty Images  கரூரில் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் 2019-ல் கோவில் நிலங்களை மீட்க  வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.   கோவில் நிலங்களில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் ம...

திருப்போரூர் கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை, அரேபிய முஹம்மதிய தர்கா ஆக்கிரமிப்பு

Image
  திருப்போரூர் கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை, தர்கா ஆக்கிரமித்திருப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இந்து அறநிலைய துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. by  Sekar   ·  November 27, 2024 https://www.sekarreporter.com/2024/11/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B/  திருப்போரூர் கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை, தர்கா ஆக்கிரமித்திருப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இந்து அறநிலைய துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருப்போரூர் கந்தசாமி கோவில் நிலங்களை மீட்க கோரி ஜெகநாத், என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி நிலங்களை மீட்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்...

உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஓழிப்பு என்ற வெறுப்பு பேச்சு வழக்கு ஒத்திவைப்பு

Image
சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் https://www.hindutamil.in/news/tamilnadu/1210866-supreme-court-condemns-udhayanidhi-stalin-s-talk-about-sanatana-dharma-1.html புதுடெல்லி:  சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘நீங்கள் சாதாரண நபர் அல்ல. மாநிலத்தின் அமைச்சர். உங்கள் பேச்சு எந்த அளவுக்கு தாக்கம், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை ’’ என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் ...

பாபராயன் பேட்டையில் உள்ள விஜய வரதராஜ பெருமாள் கோயில் -அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்

Image
திமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!   Web Desk     Nov 21, 2024 கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.   செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பாபராயன் பேட்டையில் உள்ள விஜய வரதராஜ பெருமாள் கோயிலில், வடகலை வைணவ சம்பிரதாயப்படி திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  2020ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவு கடைபிடிக்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப...

கரூர் வெண்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நில மீட்பு நடவடிக்கை - சீமான் எதிர்ப்பு

 கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் நிலங்கள் மீட்பு! அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்! Authored byஅன்னபூரணி L | Samayam Tamil 19 Sep 2024, 6:39 pm கரூரில் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் 2019-ல் கோவில் நிலங்களை மீட்க  வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நிலங்களை அறநிலையத்துறை மீட்டு வரும் நிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் வாக்குவாதம் ​கரூரில் பிரசித்தி பெற்ற வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு: கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ...

பக்தர்கள் வரும் வரை தான் கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் நீதிபதி கருத்து

பக்தர்கள் வரும் வரை தான் கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் நீதிபதி கருத்து நமது நிருபர்   ADDED : அக் 19, 2024 02:44 PM   சென்னை : '' பக்தர்கள் வரும் வரை தான் கோவில்,'' என சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். அங்கே காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றாறால் விபூதி கூட கிடைக்காது. அங்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆருத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு போல் பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகிவிடும். பக்தர்கள் வரும் வரை தான் கோவில் எனக்குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி ஹிந்து சமய அறநிலையத்துறைக...