கரூர் வெண்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நில மீட்பு நடவடிக்கை - சீமான் எதிர்ப்பு

 கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் நிலங்கள் மீட்பு! அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
Authored byஅன்னபூரணி L | Samayam Tamil 19 Sep 2024, 6:39 pm


கரூரில் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் 2019-ல் கோவில் நிலங்களை மீட்க  வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நிலங்களை அறநிலையத்துறை மீட்டு வரும் நிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் வாக்குவாதம்
​கரூரில் பிரசித்தி பெற்ற வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு:

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 11.61 ஏக்கர் நிலம் மீட்பு


100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு:

அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் அருகில் அமைந்துள்ள 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற இருந்த நிலையில், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளதால், பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்குவாதம்:

இதையடுத்து கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.

கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை:

உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை உறுதியாக நடைபெறும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட நிலையில் தற்போது கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு:

மேலும் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்த பிறகு மேலும் ஒரு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற பொழுது பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை தீவிரமாக மீட்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று கரூரில் பிரசித்தி பெற்ற வெண்ணைமலை முருகன் கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

இறைவன் ஊர்வலம் அடிப்படை உரிமை கீழ் வருவது; எல்லா தெருக்களிலும் செல்லலாம் யாரும் தடைபோட முடியாது

HR&CE department cannot reduce tenure of temple trustees : Madras High court

கோவில் சடங்கு- வழிபாட்டு முறை மாற்ற அரசு கோர்ட்டிற்கு உரிமை இல்லை. பத்திரிக்கைகள் பொய் பரப்பினால் தண்டனை -கேரளா உயர்நீதிமன்றம்